ஜஹ்ரானிற்கு சம்பளம் வழங்கியமை குறித்து மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் - ஜேவிபி..! - Sri Lanka Muslim

ஜஹ்ரானிற்கு சம்பளம் வழங்கியமை குறித்து மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் – ஜேவிபி..!

Contributors

மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிமிற்கு சம்பளம் வழ ங்கியமை குறித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜேவிபியின் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையை தேசியப்பட்டியலிற்கு நியமித்தமை குறித்து உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு ஜேவிபியிடமிருந்து எந்த வாக்குமூலத்தையும் பெறவில்லை என தெரிவித்துள்ள அவர் தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிம் உட்பட 21 பேருக்கு சம்பளம் வழங்கியமைக்காக மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களின் தந்தையான வர்த்தகருக்கு மகிந்த ராஜபக்ச விருது வழங்கிய பின்னரே அவரை ஜேவிபி தேசியப்பட்டியலிற்கு நியமித்தது என பிமல்ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
சரத்வீரசேகர முகமட் இப்ராஹிம் குறித்து தகவல்களை சேகரிக்கின்றார் என்றால் அவர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஜஹ்ரானிற்கும் ஏனையவர்களிற்கும் சம்பளம் வழங்கியமை குறித்து வாக்குமூலத்தை பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகயிந்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச வர்த்தகருக்கு விருதுகளை வழங்கியிருந்தார் அதனை கருத்தில் கொண்டே அவரை தேசியப்பட்டியலில் நியமிப்பதற்கு ஜேவிபி முடிவு செய்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தினக்குரல்

Web Design by Srilanka Muslims Web Team