ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்காது போனாலும் மாற்று வழியில் எதிர்கொள்ள தயார் - அஜித் நிவாட் கப்ரால்..! - Sri Lanka Muslim

ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்காது போனாலும் மாற்று வழியில் எதிர்கொள்ள தயார் – அஜித் நிவாட் கப்ரால்..!

Contributors

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வருவதாக  நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக நாட்டை கொள்கை ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை, இருப்பினும் சில வேளை இது கிடைக்காமற் போனால் அதனை எதிர்கொள்வதற்கு மாற்று வழி தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு பங்குச் சந்தையிலும் முறையான ஒழுங்குறுத்தல் வேலைத்திட்டம் அமுலில் இருக்க வேண்டுமென்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவது சிரமமான காரியம் என்று கூறப்படும் கூற்று தவறானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team