ஜும்ஆவுக்கு வந்தோரின் முச்சகர வண்டிகள் உடைக்கப்பட்டு திருட்டு - Sri Lanka Muslim

ஜும்ஆவுக்கு வந்தோரின் முச்சகர வண்டிகள் உடைக்கப்பட்டு திருட்டு

Contributors

புத்தளம் கொழும்பு பிரதான பாதையில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு ஜும்ஆ மஸ்ஜிதில் கடந்த ஜும்மா நேரத்தில் மூன்று முச்சக்கர வண்டிகள் உடைக்கப்பட்டு பணமும் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.

 
ஜும்ஆவிற்காக முச்சக்கர வண்டிகளில் வருகை தந்திருந்தோர் தமது முச்சக்கர வண்டிகளை மஸ்ஜிதுக்கு முன்னால் நிறுத்திவிட்டு ஜும்மா கடமையை நிறைவேற்ற சென்று திரும்பி வந்த பார்த்த போதே மூன்று முச்சக்கர வண்டிகள் உடைக்கப்பட்டு பணமும் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 
கல்பிட்டி ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த ஒரு முச்சக்கர வண்டியை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணமும் முச்சக்கர வண்டி ஆவணங்களும் திருடப்பட்டிருந்தன.

 

மற்றைய இரு முச்சக்கர வண்டிகளும் புதுக்குடியிருப்பு பிரதேச முச்சக்கர வண்டிகளாகும். ஒன்றிலிருந்த 2 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதோடு மற்றைய முச்சக்கர வண்டி உடைக்கப்பட்டிருந்தது. (vv)

Web Design by Srilanka Muslims Web Team