ஜும்மா நோட்டிஸ் (கவிதை) » Sri Lanka Muslim

ஜும்மா நோட்டிஸ் (கவிதை)

mosque

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


உம்மா நான் ஜும்மாக்கு போறேன்- கையில்
ஒரு கட்டு நோட்சுடன் ஊட்டுக்கு வருவேன்
சும்மா இது கை துடைக்க உதவும்- சில
சுவையான பொரியலை ஒற்றவும் உதவும்.

பள்ளியில் பயான் ஒன்று சொல்வார்-அதில்
பலாயினைக் கழுவுதல் பாவங்கள் என்பார்
உள்ளே பயான் முடிந்து வந்தால் -இங்கே
ஒவ்வொரு நோட்டிசும் ஊர் பலாய் கழுவும்

துருவி ஆராய்தல் பாவம்- உலமா
தூக்கத்தில் இருப்போர்க்கும் சத்தமாய்ச் சொல்வார்
தெருவில் வருகின்ற போதே- வேட்பாளர்
வீட்டுக்குள் நடந்ததை நோட்டீஸில் கிழிப்பார்

சூழலை சுத்தமாய் வைப்போம்
சொல்லுவார் ஹஸ்ரத் பள்ளியில் நின்று
கீழே போடுவார் நோட்டீஸ்- பாதை
பாழாகிப் போகும் பரவிய நோட்ஸால்

உம்மத்தின் ஒற்றுமை பற்றி
ஓங்கி உரைப்பார் உள்ளே ஹஸ்ரத்.
செம்மையாய் சாத்தப் படுவார்
சில நோட்டிசு கொடுத்து மாட்டுபவர் வெளியே

மாற்றி யோசிப்போம் மக்காள்
நோட்டிஸால் மாறாது பார்ட்டியின் நிலைமை
ஓட்டுக் கேட்கின்ற ஆட்கள்- நோட்டிஸ்
ஊடக முறையைக் கைவிட்டால் நல்லம்.

உம்மா நான் ஜும்மாக்கு போறேன்- கையில்
ஒரு கட்டு நோட்சுடன் ஊட்டுக்கு வருவேன்
இம்மாதிரி நோட்டிஸ்களாலே
ஜும்மாவின் மகிமையும் சும்மாண்ணு ஆச்சு.

Web Design by The Design Lanka