ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம்! - Sri Lanka Muslim

ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம்!

Contributors

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று ராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்த நிலையில் ஜெனிவா தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய நாடு என்ற வகையில், குறித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை அமெரிக்க வலியுறுத்தும் என்று நம்பப்படுகிறது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வோஷிங்டனுக்கு செல்லும் நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கனை சந்திக்கும்போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் என கூறப்படும் இலங்கையில் அரசியல் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team