ஜெனீரா ஹைருல் அமானின் இரு நூல்களின் வெளியீடு...! - Sri Lanka Muslim

ஜெனீரா ஹைருல் அமானின் இரு நூல்களின் வெளியீடு…!

Contributors

(ரைஸ்)

‘எழுத்தாளர்களின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் எமது பங்களிப்பு இன்றியமையாத தேவை’ என நேற்று நடைபெற்ற ஜெனீரா ஹைருல் அமானின் இரு நூல்களின் வெளியீட்டு விழா வைபவத்தில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருப் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ‘மழலையர் மாருதம்’ ‘முப்லிஹாவின் இனிய கானங்கள்’  எனும் இரு வெளியீடு நேற்று வெகுவிமர்சையாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருப் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், நகரசபை பிரதி தவிசாளர் சபறுள்ளா, வலயக்கல்வி பணிப்பாளர் ஹாசிம், பிரதிக் கல்விப்பணிப்பாளர் முனவ்வரா நளீம், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சுவைஞர்கள் என ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team