ஜெனீவா சவாலை எதிர்கொள்வேன்;ஜனாதிபதி அதிரடி கருத்து - Sri Lanka Muslim

ஜெனீவா சவாலை எதிர்கொள்வேன்;ஜனாதிபதி அதிரடி கருத்து

Contributors

ஜெனிவா தீர்மானம் உள்ளிட்ட சர்வதேச விடயங்களுக்கு முகம்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தெனியாய பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனான சந்திப்பு செயற்த்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததானது,

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வளங்காததன் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் முழுமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலாவதாக தேசிய பாதுகாப்பு விழ்ச்சியடைந்தது. இராணுவத்தினரை குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இன்றும் சிலர் அந்த வழக்குகளில் இருந்து விடுப்பட்டுக்கொள்ள முடியாது தடுமாறி வருகின்றனர். ஜெனிவாவில் இணை அனுசரனை வழங்குவதாக குறிப்பிட்டு எமது இறைமையை? சுயாதீன தன்மையை முற்றாக இல்லாது செய்தனர். இதிலிருந்து நாம் விலகியுள்ளோம் அதற்காக அவர்கள் எமக்கு எதிராக செயற்ப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் அந்த விடயங்களுக்கு முகம்கொடுக்க முடியுதம். நாங்ள் சுதந்திரமடைந்த நாடு, எங்களுடைய வேலைகளை எங்களால் செய்துக்கொள்ள முடியும். புதிய லிபரல் வாதத்தை அல்லது இந்து சமுத்திர வல்லரசு நாடுகளின் மோதலுக்கு நாங்கள் முன்னிலையாக வேண்டிய தேவை இல்லை. அதிகார பகிர்வு என்ற ரீதியில் மீண்டும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஏற்றவிதத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, எமது தனித்துவத்தை காட்டிக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை.

Web Design by Srilanka Muslims Web Team