ஜெனீவா தீர்மானம்- சம்பந்தன் வெளியிட்ட அதிரடி கருத்து - Sri Lanka Muslim

ஜெனீவா தீர்மானம்- சம்பந்தன் வெளியிட்ட அதிரடி கருத்து

Contributors

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம், அது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இது நடைமுறைப்படுத்த வேண்டும்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய கேள்விக்கு அரசியல் தீர்வு தேவை என்பதே எங்கள் நிலைப்பாடு.

தீர்மானத்தை கொண்டுவந்த நாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரையும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக செயல்படுமாறு நாங்கள் கோருகின்றோம்.

இந்தியா ஆதரிக்கவில்லை, ஆனால் எதிராகவும் வாக்களிக்கவில்லை.

இந்தியா இலங்கை குறித்து ஆழமாக சிந்தித்து தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுத்துள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை, தீர்மானத்தின் உள்ளடக்கம் செயல்படுத்தப்பட வேண்டும். ” என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team