ஜெனீவா மாநாட்டுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் பெளஸி சவூதி பயணம் - Sri Lanka Muslim

ஜெனீவா மாநாட்டுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் பெளஸி சவூதி பயணம்

Contributors

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கான ஆதரவைப் பெறுவதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வரும் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நேற்று (9) பகல் சவூதி அரேபியாவுக்குப் பயணமானார்.

 

 

சவூதி அரேபியாவில் முடிக்குரிய இளவரசர் உட்பட முக்கியஸ்தர்களை சந்திக்கும் அமைச்சர் பெளஸி சமாதானம் உதயமான பின்னர் இலங்கையின் நிலைமை மக்களின் புனர்வாழ்வு, மீள்நிர்மாணப் பணிகள் சமாதான சூழ்நிலை பற்றியும் விளங்குவர்.

 

 

ஜெனீவா மாநாட்டில் குவைத்தின் ஆதரவையும் கோரிய அமைச்சர் பெளஸி, கடந்த வாரம் குவைத்தில் தலைவர்களை சந்தித்துப் பேசி விட்டு வெள்ளியன்று மாலையே இலங்கை திரும்பினார்.(tk)

Web Design by Srilanka Muslims Web Team