ஜெயசிறிலின் விவகாரம் தொடர்பில் அறிந்துள்ளோம் : அது குறித்து தமிழ் கூட்டமைப்பு தலைமைத்துவங்கள் ஆலோசிக்கவுள்ளது - சுமந்திரன் எம்.பி..! - Sri Lanka Muslim

ஜெயசிறிலின் விவகாரம் தொடர்பில் அறிந்துள்ளோம் : அது குறித்து தமிழ் கூட்டமைப்பு தலைமைத்துவங்கள் ஆலோசிக்கவுள்ளது – சுமந்திரன் எம்.பி..!

Contributors

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறிலின் மதநிந்தனை விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் கலந்துரையாடி முடிவை எடுக்க உள்ளதாக அக்கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் சந்தித்து பேசிய போது தெரிவித்ததாக இன்று (06) பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், முஹம்மது நபியை அவமத்திக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் காரைதீவு தவிசாளர் கி. ஜெயசிறில் நடந்துகொண்ட விதத்தை எதிர்த்து சமூக அமைப்புக்களும், சமூக செயற்பாட்டாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் அவருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடுகள் செய்துவரும் விடயத்தையும், அவர் சமூக வலைத்தளத்தில் மேற்கொண்ட குழப்பகரமான நடவடிக்கையின் மூலம் இந்த நாட்டில் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாரதூரங்களை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனிடம் தான் எடுத்துரைத்ததாகவும் அதற்கு இவ்விடயம் தொடர்பில் தானும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்களும் ஏற்கனவே பல வழிகளினாலும் இது தொடர்பில் அறிந்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் கூடிப்பேசி தீர்க்கமான முடிவை எடுக்க உள்ளதாவும் எம்.ஏ. சுமந்திரன் உறுதியளித்ததாக எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team