ஜெயசிறிலுக்கு மு.கா கொடுத்த ஆதரவை வாபஸ் பெற வேண்டும் : தமிழ் கூட்டமைப்பு அவரை கட்சியை விட்டு உடனடியாக நீக்க வேண்டும் - எஹியாகான்..! - Sri Lanka Muslim

ஜெயசிறிலுக்கு மு.கா கொடுத்த ஆதரவை வாபஸ் பெற வேண்டும் : தமிழ் கூட்டமைப்பு அவரை கட்சியை விட்டு உடனடியாக நீக்க வேண்டும் – எஹியாகான்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

உலக வாழ் மக்களின் நன்மதிப்பை பெற்ற தலைவராக உள்ள கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது தவறான கருத்தை முன்வைத்த தவிசாளர் இப்படியான இனவாத கருத்துக்களை பரப்பி இதை வைத்து அவர் மீண்டும் ஒருமுறை இந்த சபைக்கு தவிசாளராக வரலாம் அல்லது மாகாண சபை உறுப்பினராகலாம் எனக் கனவு காணுகிறார். இவ்வாறான மனித குலத்திற்க்கு மாற்றமான கருத்துக்களை முன்வைத்த இவர் மீது நாங்கள் கடுமையான கண்டனத்தை இந்த இடத்தில் பதிவு செய்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி பொருளாளர் எ.சி.எஹியாகான் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், அனைத்து சமூகத்தினாலும் பாராட்ட கூடிய ஒரு மூத்த அரசியல் தலைமையாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் தலைவராக இருக்கின்ற இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்படியாபட்டவர்களை வைத்திருப்பது அந்த கட்சிக்கு பாரிய இழுக்காகும். இனவாத கோரமுகத்தை கொண்ட இவரை உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று நாங்கள் அக்கட்சியை கேட்கிறோம்.

இப்படிபட்டவர்களை தமிழ் முஸ்லிம் மக்கள் பின்னிப்பிணைந்து வாழும் பிரதேசமொன்றில் தவிசாளராக தொடர்ந்தும் வைத்திருந்தால் ஒரு இன பிரச்சினைகளை உருவாக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும். அதனால் காரைதீவு பிரதேச சபையில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் தவிசாளராக உருவாக்க இவருக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் என்னுடைய கோரிக்கையை முன்வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team