ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆரம்பம்! அதிரடி உத்தரவு » Sri Lanka Muslim

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆரம்பம்! அதிரடி உத்தரவு

jay66

Contributors
author image

Editorial Team

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஆரம்பம் முதலலே மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கருத்து தெரவித்து வந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷபா, இதுதொடர்பாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

அதன் ஒரு பகுதியாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் சசிகலா புஷ்பா மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மர்மத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தனிப்பட்ட மற்றும் பயிற்சி துறை (department of personal and training) நடவடிக்கை எடுத்து, சசிகலாபுஷ்பாவுக்கு, தெரிவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலா புஷ்பா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka