ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பும் பாலத்தீன தூதர் » Sri Lanka Muslim

ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பும் பாலத்தீன தூதர்

jerusalam

Contributors
author image

BBC

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு குறித்து, ஒரு நாள் மட்டும் ஆலோசனை செய்த பிறகு மீண்டும் அமெரிக்கா திரும்புவதாக பாலத்தீனியத்திற்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.

பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸை தனிப்பட்ட விதத்தில் சந்தித்ததாக தூதர் ஹுசம் சோம்லோட் கூறியுள்ளார்.

முன்பு, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சென்ற தூதர் ஹுசம் சோம்லோட்டியை, பாலத்தீனிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவில் இருந்து அழைத்துக் கொண்டதாக பாலத்தீனிய செய்தி நிறுவனமான வாஃபா கூறியிருந்தது.

அமெரிக்காவின் எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் உடன்படப்போவதில்லை என்று பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்

உடனே வாஷிங்டன் திரும்புமாறு, அதிபர் அப்பாஸ் அறிவுறுத்தியதாக ஹுசம் சோம்லோட் கூறினார்.

டிரம்ப் ஜெருசலேத்தை தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்து காஸாவில் போராட்டமும், கலவரமும் வெடித்தது.

டிரம்ப் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களில் சிக்கி இதுவரை 13 பாலத்தீனியர்கள் இறந்துள்ளார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள், இஸ்ரேல் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்தவர்கள்.

அமெரிக்க உறவு குறித்து பாலத்தீன தலைமையின் தேவை பற்றிய முடிவுகள் எடுக்க அதிபர் அப்பாஸ் மற்றும் சோம்லோட் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக பாலத்தீனிய வெளியுறவுத் துறை கூறினார்.

இஸ்ரேல் – பாலத்தீனிய பிரச்சனைக்கு ஜெருசலேம்தான் மைய காரணமாக இருக்கிறது.

துருக்கியின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் கைப்பற்றியது.

பாலத்தீனியர்கள் எதிர்காலத்தில் அமைய இருக்கும் தங்கள் தேசத்துக்கு கிழக்கு ஜெருசலேம்தான் தலைநகராக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Web Design by The Design Lanka