ஜெருசலேம் விவகாரம்: டிரம்புக்கு துருக்கி எச்சரிக்கை » Sri Lanka Muslim

ஜெருசலேம் விவகாரம்: டிரம்புக்கு துருக்கி எச்சரிக்கை

turkey

Contributors
author image

Editorial Team

(BBC)


இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்று துருக்கி அதிபர் எச்சரித்துள்ளார்.

எருசலேம்படத்தின் காப்புரிமைRRODRICKBEILER

இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்று துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிப் எர்துவான் தெரிவித்திருக்கிறார்.

டிரம்பிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பை, வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜெருசலேமின் தகுதி நிலை பற்றிய அமெரிக்க கொள்கைளை இந்த வாரம் திடீரென அமெரிக்க அதிபர் மாற்றலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மிகவும் பதற்றமான சிக்கல்களில் ஒன்றாக ஜெருசலேம் உள்ளது.

“டிரம்ப் அவர்களே! ஜெருசலம் முஸ்லிம்களின் சிவப்புக் கோடு” என்று செவ்வாய்கிழமை தொலைக்காட்சி உரையில் எர்துவான் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பிரச்சனை தொடர்பாக இஸ்ரேலோடு இருக்கும் ராஜீய உறவை துண்டிக்கும் அளவுக்கு நாங்கள் செல்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.

டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை நகர்த்துவதற்கு திங்கள்கிழமை கையெழுத்திடுவதற்கு இருந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் இன்னும் கையெழுத்திடவில்லை.

இது, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமானால், 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவான பின்னர், அதன் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் முதல் நாடாக அமெரிக்கா மாறும்.

தங்களின் எதிர்கால பாலத்தீன தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனர்கள் உரிமை கொண்டாடி வருகையில், ஜெருசலேம் முழுவதையும் தன்னுடைய தலைநகராக இஸ்ரேல் கூறி வருகிறது.

ஜெருசலேமின் தகுநிலை என்ன?

ஜெருசலேமின் தகுதி நிலை இஸ்ரேல் பாலத்தீனருடன் கொண்டிருக்கும் மோதலின் முக்கிய பகுதியாக உள்ளது.

பாலத்தீனர்கள் அரேபிய மற்றும் இஸ்லாமிய உலகத்தின் ஆதரவை பெற்றுள்ளனர்.

இந்த நகரில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேமில்தான், யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின் முக்கிய புனித இடங்கள் உள்ளன.

வரைபடம்

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இவ்விடத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேம் முழுவதையும் அதனுடைய தலைநகரமாக இஸ்ரேல் கூறி வருகிறது.

எதிர்கால சுதந்திர தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனம் உரிமை கோரி வருகிறது. 1993ம் ஆண்டு இஸ்ரேல்-பாலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, தலைநகரின் இறுதி தகுதி நிலை பிந்தைய அமைதி பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெருசலேம் முழுவதையும் தன்னுடையதாக கோருகின்ற இஸ்ரேலின் நிலைப்பாடு சர்வதேச அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இஸ்ரேலின் மிகவும் நெருக்கமாக கூட்டாளியான அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்களின் தூதரகங்களை இஸ்ரேலின் டெல் அவிவில் கொண்டுள்ளன.

1967 ஆம் ஆண்டு தொடங்கி கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் ஒரு டஜன் குடியிருப்புக்களை கட்டி சுமார் 2 லட்சம் யூதர்கனை குடியேற்றியுள்ளது. சர்வதேச சட்டப்படி இது சட்டத்திற்கு புறம்பானது என்று கருதப்படுகிறது. இதை இஸ்ரேல் மறுக்கிறது.

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், பிற சர்வதேச சமூகத்திற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அமையும். கிழக்கு ஜெருசலேமிலுள்ள இஸ்ரேலிய சமூகத்தின் குடியிருப்புகள் அனைத்தும் சரியானவை என்று வாதிடும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்.

சர்வதேச எதிர்வினைகள்

பிரான்ஸ்: ஜெருசலேமின் தகுதி நிலை பற்றிய எந்தவொரு முடிவும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தை சட்டகத்துக்குள் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மக்ரோங், அமெரிக்கத் தலைவர் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக ஏற்றுக்கொள்வதில் கவலையடைவதாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் கொடிபடத்தின் காப்புரிமைAFP

ஐரோப்பிய ஒன்றியம்: மத்திய கிழக்கு நாடுகளின் ‘நான்கு மத்தியஸ்தர்கள்’ என்று கூறப்படும் சக்திகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியம் உலகின் பெரும்பகுதியில் மக்கள் கருத்தில் இது காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா ஆகியவை நான்கு மத்தியஸ்தர் தொகுதியில் உள்ள பிற சக்திகள்.

அரபு ஒன்றிய நாடுகள்: “பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தான நடவடிக்கை என்று அரபு ஒன்றிய நாடுகளின் தலைவர் அஹமத் அபூல் கெய்ட் தெரிவித்திருக்கிறார்.

சௌதி அரேபியா: இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் இறுதி தீர்வு ஏற்படும் முன்னால் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கை அமைதி முயற்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாலத்தீனம்: அமெரிக்காவின் இத்தகைய முடிவு அமைதி முயற்சியை அழித்துவிடும் என்று கூறி உலக நாடுகளின் தலைவர்கள் இதில் தலையிட வேண்டும் என்று பாலத்தீனத்தின் அதிபர் முகமத் அப்பாஸ் கோரியுள்ளார்.

ஜோர்டன்: ஜெருசலேமிலுள்ள இஸ்லாமிய புனித இடங்களின் பாதுகாப்பாளராக இருக்கும் ஜோர்டன், மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

Web Design by The Design Lanka