ஜெரூசலத்தின் எல்லையில் இருந்து கௌரவத்துக்கான ஒரு படிப்பினை!! » Sri Lanka Muslim

ஜெரூசலத்தின் எல்லையில் இருந்து கௌரவத்துக்கான ஒரு படிப்பினை!!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-முஹம்மது ராஜி


அது 637 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதி. ஜெருசலம் முஸ்லீம் படைகளால், முற்றுகையிடப்பட்டு விட்டது .

ஆறு மாத கடும் முற்றுகை..

இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று முடிவு செய்த அந்த நகரின் கிருஸ்தவ நிர்வாகம் சரணடைய முடிவு செய்கிறது . ஆனால் ஜெருசலம் நகரம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதால் அதன் வாயில் திறப்பை கலீபாவிடம் மாத்திரமே கையளிப்போம் என்றும்அவர் அதை நேரில் வந்தே பெற வேண்டும்.
என்றும் கிருஸ்தவ நிர்வாகம் விதிருந்தது நிபந்தனை.

செய்தி அப்போதைய கலீபாவாக உமர் ( ரலி )அவர்களுக்கு அனுப்பப்படுக்கிறது . நீண்ட கலந்தாலோசனையின் பின்னர் திறப்பை நேரில் சென்று எடுத்துவர முடிவு செய்கிறார் உமர் ( ரலி ).

மதீனாவில் இருந்து ஜெரூசலம் நோக்கிய நீண்ட பயணம் …

ஒட்டகம் ஒன்றிலே உமர் ( ரலி ) அவர்களும் அவரது பணியாளரும் பயணிக்கிறார்கள் .

பயணம் மூன்றாக வகுக்கப்பட்டு குறிப்பிட்ட துரத்துக்கு உமர் ( ரலி ) அவர்களும், இன்னும் குறிப்பிட்ட துரத்துக்கு பணியாளருக்கு குறிப்பிட்ட துரத்துக்கு ஆளில்லாமல் தனியே ஓட்டகமும் பயணத்தை மாறி மாறி தொடர்கின்றனர் புழுதி மற்றும் சேறு நிறைந்த வழிகளுக்கிடையேயான பிரயாணம்.

ஜெரூசல எல்லை வந்து விட்டது .

“கலீபாவே ..நீண்ட தூர பயணத்தால் உங்கள் ஆடைகள் அழுக்காக காட்சி அளிக்கின்றன .ஜெரூஸல மக்கள் ரோம ஆட்சியாளர்களின்
ஆடைகளுக்கு பழக்க வழக்கங்களுக்கு பழக்கப்பட்டவர்கள் .

இந்த ஆடை சேறு, படிந்ததாக உள்ளதே .ஆடையை மாற்றி நல்ல ஆடையை போட்டுக்கொள்ளலாமே”

உமர் (ரலி ) அதிக மரியாதைக்கு உரியவர்கள் என்ற மன நிலையில் கேட்கிறார் அபூ உபைதா ( ரலி ) கோபம் கொந்தளிக்க அபூ உபைதா ( ரலி )யின் நெஞ்சில் பலமாக அடித்தவராக,

“நீங்களா இப்படி கேட்கிறீர்கள் ….” என்று ஆத்திரத்துடன் கேட்கின்றார் உமர் (ரலி ).

“நாம் கவனிப்பாரற்று கிடந்த போது அல்லாஹ் நம்மை இஸ்லாத்தின் மூலம் கண்ணியப்படுத்தினான் . இஸ்லாத்தை விடுத்து வேறு விடயங்களில் நாம் கண்ணியத்தையும் கௌரவத்தையும் எதிர்பார்த்தால் அல்லாஹ் நம்மை அவமானப்படுத்தி விடுவான் ” என்று கூறுகிறார் உமர் ( ரலி )

ஆம் உமர் (ரலி )கூறியது கொஞ்ச நேரத்திலே உண்மையானது . பரந்து விரிந்துள்ள பலமான இஸ்லாமிய தேசத்தின் கலீபாவின் பொத்தல்கள் நிறைந்த ஆடையை பார்த்த
ஜெரூசல மக்கள், அவரின் எளிமையான தன்மை கண்டு கண்ணீர் வடித்தனர். பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

உமர் (ரலி )யின் அந்த வார்த்தைகளில் தான் எத்தனை அர்த்தங்கள் !!

சம காலத்தால் உலகின் முலை முடுக்கெல்லாம் நாம் வேட்டையாடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுக்கொண்டு இருப்பதற்கு காரணம் நாம் இஸ்லாத்தை விடுத்து நாம் ஏனைய விடயங்களில் கண்ணியத்தையும், கௌரவத்தையும், எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

வசிக்கிற தேசத்தின் பெருமையாலும் வைத்திருக்கிற கடவுச்சீட்டின் கலர்களாலும் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பெறுவதற்கு முயற்சிக்கிறோம்.

வைத்திருக்கின்ற அடுக்கு மாடி வீடுகளாலும் , வாங்கி வைக்கப்பட்டுள்ள நவீன வாகனங்களாலும் ,வங்கிகளில் குந்திக்கொண்டுள்ள வைப்புக்களின் நிலுவைகளாலும் ,அணிகின்ற அழகிய ஆடைகளாலும், மின்னுகிற ஆபரணங்களாலும் , அதி நவீன கையடக்க தொலைபேசிகளாலும் , அழிந்து போகக்கூடிய அழகினாலும் , நிலையற்ற அறிவினாலும் ,
கௌரவத்தையும் கண்ணியத்தையும் தேடிக்கொண்டிருக்கிறோம் .

அதனால்தான் என்னவோ உலகம் முழுவதேமே அவமானப்படுத்தப் பட்டுக்கொண்டு இருக்கிறோம் .

Web Design by The Design Lanka