ஜோசப் ஸ்டாலின் கைது; விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்! - Sri Lanka Muslim

ஜோசப் ஸ்டாலின் கைது; விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Contributors

ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரகலய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (04) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக  எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர் சங்கம். தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதில் பெருந்திரளானோர் பங்கேற்றுள்ளதுடன், ஜோசப் ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team