ஜே.வி.பி.யின் முதலமைச்சர் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்! - Sri Lanka Muslim

ஜே.வி.பி.யின் முதலமைச்சர் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!

Contributors
author image

Editorial Team

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான ஜே.வி.பி.யின் முதலமைச்சர் வேட்பாளர் சமந்த வித்தியாரத்தினவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமந்த வித்தியாரத்தினவின் மொனராகலையில் அமைந்துள்ள வீட்டை இலக்கு வைத்து நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

 

வீட்டின் அருகில் இருந்த ஜே.வி.பி.யின் தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.

 

வீடும் அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்ட பின்னர் தாக்குதலை மேற்கொண்ட குண்டர்கள், டபள் கெப் வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றதாக சமந்த வித்தியாரத்தின கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team