ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வடக்கில் ஆர்ப்பாட்டம்! - Sri Lanka Muslim

ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வடக்கில் ஆர்ப்பாட்டம்!

Contributors

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவடக்கின் பல பகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆர்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்பாட்டம் இன்று (4) காலை 10.30 மணியளவில் பெரும்பாலான பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆர்ப்பாட்டத்தில் வவுனியா வெளிக்குளம் மகாவித்தியாலம், இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் மற்றும் சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை உட்பட பெரும்பாலான பாடசாலைகளை கலந்துகொண்டன.

இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அந்தவகையில்,  ஜனநாயக ரீதியாக உரிமைக்காக போராடிய எமது பொது செயலாளர் முறையற்ற விதத்திலே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்வதுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.

அத்துடன் இந்த அரசு அவசரகால சட்டத்தினை உடனடியாக நீக்கி நாட்டில் ஜனநாயக தன்மையை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் தேவையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும்.

எமது பொதுச்செயலாளர் உடனடியாக விடுவிக்கப்படாவிடின் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் வவுனியா வெளிக்குளம் மகாவித்தியாலம், இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் மற்றும் சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை உட்பட பெரும்பாலான பாடசாலைகளை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் இன்று(4) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டமையை கண்டிக்கும் வாசகங்களை கொண்ட பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக நேற்று(3) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team