ஜ‌மாஅதே இஸ்லாமியை அன்றே அர‌சிய‌ல் க‌ட்சிகயாக பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தி இருக்க வேண்டும். - Sri Lanka Muslim

ஜ‌மாஅதே இஸ்லாமியை அன்றே அர‌சிய‌ல் க‌ட்சிகயாக பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தி இருக்க வேண்டும்.

Contributors

கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ஜ‌மாஅதே இஸ்லாமியின் முன்னாள் த‌லைவ‌ர் மிக‌ விரைவாக‌ விசார‌ணை செய்ய‌ப்ப‌ட்டு

அவ‌ர் மீது நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌ குற்ற‌ங்க‌ள் இல்லை என்றால் விரைவில் விடுத‌லை செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து. இது ப‌ற்றி அக்க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,
ஸ‌ஹ்ரானின் முட்டாள்த்த‌ன‌மான‌ தாக்குத‌லால் ப‌ல‌ முஸ்லிம்க‌ள் க‌ட‌ந்த‌ ஆட்சியில் மிக‌ மோச‌மான‌ பாதிப்புக்க‌ளுக்கு முக‌ம் கொடுத்தார்க‌ள்.ஹ‌ஜ்ஜுல் அக்ப‌ர் கைது செய்ய‌ப்ப‌ட‌ போகிறார் என‌ க‌ட‌ந்த‌ ர‌ணில், ச‌ஜித், ஹ‌க்கீம் ஆட்சியின் போது சொல்ல‌ப்ப‌ட்ட‌ போது, ச‌மூக‌த்தின் ம‌ரியாதைக்குரிய‌ அவ‌ரை கைது செய்யாம‌ல் அவ‌ரை அழைத்து விசார‌ணை செய்து அவ‌ர‌து க‌ருத்தை ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ ப‌கிர‌ங்கமாக‌ நாம் சொன்னோம்.அத்த‌னை முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் இருந்தும், அர‌சுக்கு முட்டுக்கொடுத்தும் எவ‌ராலும் அவ‌ர‌து கைதை த‌டுக்க‌ முடியாத‌ பொன்னைய‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.இந்த‌ ஆட்சி மீண்டும் ஈஸ்ட‌ர் தாக்குத‌ல் ப‌ற்றி விசாரிப்ப‌தால் மீண்டும் ப‌ல‌ரையும் கைது செய்ய‌ வேண்டிய‌ சூழ் நிலை உள்ள‌து. இல்லாவிட்டால் எதிர்க்க‌ட்சியின‌ர் அர‌சு முறையாக‌ விசாராணை செய்ய‌வில்லை என‌ குற்ற‌ம் சொல்வ‌ர்.இவ்வாறு முஸ்லிம் ச‌மூக‌த்தின் ம‌ரியாதைக்குரிய‌வ‌ர்களை கைது செய்யும் ந‌டைமுறையை காட்டிக்கொடுத்த‌து ர‌ணில், ச‌ஜித் ஆட்சியாகும்.ஹ‌ஜ்ஜுல் அக்ப‌ர், நீதியின்ப‌டி குற்ற‌மற்ற‌வ‌ராயின் நிச்ச‌ய‌ம் விடுவிக்க‌ப்ப‌டுவார் என்ற‌ ந‌ம்பிக்கை எம‌க்கு உள்ள‌து.ஆனாலும் க‌ட‌ந்த‌ ஈஸ்ட‌ர் தாக்குத‌லை தொட‌ர்ந்து நான் ஒரு க‌ருத்தை ப‌கிர‌ங்க‌மாக‌ சொல்லியிருந்தேன். அதாவ‌து ஜ‌மாஅதே இஸ்லாமி என்ப‌து பாகிஸ்தானில் உள்ள‌ அர‌சிய‌ல் க‌ட்சியாகும். அதே வேளை ஆப்கானிஸ்தானில் ஆயுத‌ம் ஏந்தி போராடும் இய‌க்க‌மாகும். ப‌ங்க‌ளாதேசில் குற்ற‌வாளியாக‌ பார்க்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே இத்த‌கைய‌ வெளிநாட்டு பெய‌ர்க‌ள் இனி ந‌ம‌து நாட்டில் தேவையில்லை என‌ கூறினேன்.ஆக‌வே இல‌ங்கையில் உள்ள‌ ஜ‌மாஅதே இஸ்லாமி, த‌வ்ஹீத் ஜ‌மாஅத்துக்க‌ள் த‌ம‌து பெய‌ரை அர‌சிய‌ல் பெய‌ராக்கி த‌ம்மை ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தும் ப‌டியும் க‌ட‌ந்த‌ ஆட்சியின் போது ப‌கிர‌ங்க‌மாக‌ கூறினேன்.என் க‌ருத்தை இவ‌ர்க‌ள் கேட்டிருந்தால் இன்று அந்த‌ இய‌க்க‌ம் பாராளுமன்ற‌த்தில் க‌வுர‌வ‌மாக‌ இருந்திருக்கும்.

Web Design by Srilanka Muslims Web Team