ஞாயிறன்று என். நஜ்முல் ஹுசைனின் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

ஞாயிறன்று என். நஜ்முல் ஹுசைனின் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

pen

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கவிஞரும் வலம்பு ரி கவிதா வட்டத் தலைவருமான என். நஜ்முல் ஹுசைனின் “இனிவரும் நாட்களெல்லாம்….”, “நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் ” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 8-04-2018 ஞாயிறு மாலை 4.15 மணிக்கு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்ற ஏற்பாட்டில் கொழும்பு மெஸஞ்ச ர் வீதி பிரைட்டன் ரெஸ்ட் ஹோட்டலில் நடைபெறும்.

மன்றத் தலைவர் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் நூல்களின் முதல் பிரதிகளை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், சூட்டர்ஸ் நிறுவன நிர்வாகப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம். ஜீ. எச். அக்ரம் ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும் ,அரசாங்க சேவைகள் ஆணைக்குழு ஆணையாளருமான பேராசி ரியர் ஹுசைன் இஸ்மாயில் பிரதம அதிதியாகவும, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.கே.எம். யூனூஸ் சிறப்பதிதியாகவூம் கலந்து கொள்வர். ஞாயிறு தினக்குரல் பிரதம ஆசிரியர் ஆர். பாரதி, தினகரன் வாரமஞ்சரி முன்னாள் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் ஹாபிஸ் எஸ்.எம். ஹனீபா ஆகியோர் வாழ்த்துரைகளையும், சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் சனூஸ் முஹம்மத் பெரோஸ், ரூபவாஹினி கூட்டுத்தாபன தயாரிப்பாளர் முபாரக் மொஹிதீன் ஆகியோர் நூல் நயவுரைகளையும் வழங்குவர்.

சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் வரவேற்புரை வழங்க வகவ செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழகணேஷ், மத்திய மாகாண முதலமைச்சரின் இணைப்பதிகாரியான ரஷீத் எம் றியாழ், சட்டத்தரணி நூருஸ் ஷப்னா சிராஜுதீன் ஆகியோர் கவி வாழ்த்துகளையும் வழங்குவர். நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், சுடர் ஒளி பத்திhpகை முன்னாள் பிரதம ஆசிரியர் பத்மசீலன், லேக்ஹவூஸ் தமிழ் பிரசுரங்களுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம், தினகரன் பிரதம ஆசிரியர் கே;. குணராசாஇ இ.ஒ.கூ. முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளா; எம்.இஸட். அஹமத் முனவ்வர் , வீரகேசரி ஞாயிறு வெளியீடு பிரதி ஆசிரியர் ரேணுகா பிரபாகரன், இலங்கை ரூபவாஹினி தாயாரிப்பாளர் மாஹிர், மௌலானா, வீரகேச ரி சங்கமம் பொறுப்பாசிரியர் ஜீவா சதாசிவம், சுடர் ஒளி ஆசி ரியர் பீட ராதா மே த்தா, விடிவெள்ளி பொறுப்பாசி ரியர், எம்.பி.எம்.பைரூஸ், கெப்பிட்டல் எப்.எம். அலைவா ரிசை பிரதானி ஷியாஉல் ஹஸன்இ ஒளி அரசி பிரதம ஆசி ரியர் எஸ் ஜனதன்இ தமிழக வளரி சஞ்சிகை ஆசிரியர் அருணா சுந்தரராசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.

Web Design by The Design Lanka