ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள பொதுபலசேனாவின் மாநாட்டில்... - Sri Lanka Muslim

ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள பொதுபலசேனாவின் மாநாட்டில்…

Contributors
author image

Editorial Team

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பௌத்த பிக்குமாரின் உச்சி மாநாட்டின் போது சிங்கள பௌத்தர்களின் பிரச்சாரங்களை அரசியலில் முன்னெடுக்க கூடிய தலைவர் ஒருவரை தெரிவு செய்து அறிவிக்கப்பபோவதாக பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

 

சிங்கள பௌத்தர்களுக்கு அவர்களது உரிமையை வென்றெடுக்க கூடிய தலைவர் ஓருவர் அவசரமாக தேவையாகவுள்ளது, நாங்கள் சிங்கள பௌத்தர்களுக்கு தலைமை தாங்க கூடிய ஒருவரை தெரிவு செய்யும் பொறுப்பை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கள பௌத்தத்தை அவமதித்துள்ள அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடத்தை கற்ப்பிப்பதற்கான கொள்கைகள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கள பௌத்தர்களை பார்த்து குரைத்த அரசியல்வாதிகளுக்கு ஊவா தேர்தலில் நல்ல பாடம் புகட்டப்பட்டது,நாங்கள் எங்கள் நாட்டிலேயே முடவர்களாகிவிட்டோம், 12 வீதம் உள்ள தமிழர்களும், 7வீதம் உள்ள முஸ்லீம்களும் தங்களது உரிமையை கோருகின்றனர்,அதனை யாரும் இனவாதம் என குறிப்பிடுவதில்லை,

 

நாட்டிலுள்ள சகல கட்டமைப்புகளும் உண்மையான பௌத்த விழுமியங்களால் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் தருணமிது, இதற்காக நாங்கள் பாடுபடுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team