டயகம சிறுமி தங்கியிருந்த அறையில் எழுதப்பட்டிருந்த விடயம் குறித்து விசாரணை…!! - Sri Lanka Muslim

டயகம சிறுமி தங்கியிருந்த அறையில் எழுதப்பட்டிருந்த விடயம் குறித்து விசாரணை…!!

Contributors

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் சிறுமி தான் தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதியதாக கூறப்படும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்திவருகின்றனர்.

என் சாவுக்கு காரணம் என சிறுமி எழுதியதாக தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க பகுப்பாய்வாளர் உட்பட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

என் சாவுக்கு காரணம் என்பது ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது குறித்தும் பேனையால் அது எழுதப்பட்டுள்ளமை குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

என் சாவுக்கு காரணம் என்பது சிறுமியின் மரணத்திற்கு முன்னர் எழுதப்பட்டதா பின்னர் எழுதப்பட்டதா விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கத்தில் எழுதப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team