டயகம யுவதியின் மரணம் தொடர்பான விசாரனை என்ற பேரில் மிகப்பெரும் நாடகமொன்று அரங்கேறுகின்றது..! - Sri Lanka Muslim

டயகம யுவதியின் மரணம் தொடர்பான விசாரனை என்ற பேரில் மிகப்பெரும் நாடகமொன்று அரங்கேறுகின்றது..!

Contributors

டயகம யுவதிக்கு முன்னர் ரிஷாதின் வீட்டில் பணியிலிருந்ததாகவும் ரிஷாதின் மைத்துனரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் 22 வயது பெண்னொருவர் விசாரனையின் போது கூறியதாக கடந்த வாரம் ஊடகங்கள் கதை பரப்பின.

இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு ரிஷாதின் மைத்துனர் இம்சிக்கப்படுவதாக மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஒரிரு நாட்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

நேற்று இன்னொரு பெண்ணும் ரிஷாதின் அதே வீட்டில் 2009-2010ல் வேலை செய்ததாகவும் ரிஷாதின் மைத்துனரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகவும் கூறியுள்ளதாக இன்னொரு கதை பரவியது.

2009-2010ல் ரிஷாத் பதியுத்தீன் அந்த வீட்டில் வசிக்கவே இல்லை என்ற தகவல் வெளியானதும் மூக்குடைபட்ட ஊடகங்கள் இப்போது டயகம யுவதியால் எழுதப்பட்டதாக இரண்டு வரிகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு அலறுகின்றது.

கிட்டத்தட்ட முழு நீள நகைச்சுவை படமொன்று ஓடுகின்றது.

டயகம யுவதி ரிஷாத் பதியுத்தீனின் வீட்டிலிருந்து உயிரும் உணர்வும் உரைக்கும் திறனும் உள்ள நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதும், 12 நாட்கள் உயிர்வாழ்ந்து மரணித்ததும் மட்டுமே இதுவரை கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்கள்.

யுவதி மரணித்து இரண்டாவது நாள்களிலிருந்து படம் ஓடத்தொடங்கிவிட்டது

இஷாலினி என்ற பெயரில் ஒரு எழுத்தை உச்சரிக்காமல் விட்டு ரிஷாதின் மாமா கொலையை மறைக்க முட்பட்டுள்ளார் என்று ஜோக்குடன் ஆரம்பித்த படம் இன்று ரிஷாத் அந்த வீட்டில் வசிக்காத 2009-2010 காலத்தில் ஒரு பெண் பணிபுரிந்ததாகவும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாகவும் மகா ஜோக்குகளுடன் தொடர்கின்றது.

இந்த நிலையில்தான் டொக்டர் ஷாபி மீதான விசாரனைகள் முடிவுற்றதாகவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்ற CIDயின் அறிக்கையும் வெளிவந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் அந்த அறிக்கையை வெளியிட்டதால் இனவாதிகளின் கவனம் அறிக்கையின் பக்கம் திரும்பவில்லை.

டொக்டர் ஷாபியின் விடையம் ஒரு CID அறிக்கையுடன் முடிவுற அனுமதிப்பது பெரும் அநீதி.

உடல்,உளவியல் ரீதியாக பாரிய சிரமத்துக்குள்ளான டொக்டர் ஷாபிக்கு நீதி கிட்ட வேண்டும்.

Patta boru எனும் உச்ச பொய்களை தாம் தாம் விரும்பியவாறு ஒருவர் மீது குற்றம் சுமர்த்துவத்துவதற்கும் அதையே உத்தமமான உண்மையாக பரப்புரை செய்வதற்கும் தனிநபர்களுக்கும் ஊடகங்களுக்கும் உரிமையிருந்தால் நீதி பற்றி மேலும் பேச என்னவுண்டு?

பணத்துக்காகவோ வேறு சுயநல,அரசியல் காரணங்களுக்காவோ பொய் சாட்சியம் கூறுவோருக்கு தன்டனை பெற்றுக்கொடுக்கும் வரை நீதி இயங்கவேண்டும்.

குற்றச்சாட்டிலிருந்து விடிவிப்பது நீதியல்ல.
பொய்குற்றம் சாட்டுவோர் தண்டிக்கப்படவேண்டும்.

முதலைக்கதையை பரப்பியோரை கைது செய்து தண்டிக்கலாம் என்றால் டொக்டர் ஷாபியை சந்திக்கு இழுத்து களங்கம் செய்த கயவர்கள் ஏன் தண்டிக்கப்பட முடியாது?

-அரசியன்-

Web Design by Srilanka Muslims Web Team