டயடான்ஸ் விளையாட்டுக் கழகத்தின் விசேட இப்தார் நிகழ்வு. » Sri Lanka Muslim

டயடான்ஸ் விளையாட்டுக் கழகத்தின் விசேட இப்தார் நிகழ்வு.

d.jpg2.jpg3

Contributors
author image

A.L.A. Rafeek Firthous

டயடான்ஸ் விளையாட்டுக் கழகத்தின் விசேட இப்தார் நிகழ்வு நேற்று (17) மாலை நிந்தவூர் ஹசன் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 அமைப்பின் மத்திய கிழக்கு நாடுகளின் இணைப்பாளரும், டயடான்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவருமான எம்.சீ.எம்.றிபாய் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்களின் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும்,  அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ்.எம்.எச் யாக்கூப் ஹசன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை, சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய சமூக சேவைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.அமீர், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.அனஸ் அஹமட், இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.பரீட், மற்றும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்பின் தலைவர்கள், ஊர்ப்பெரியார்கள், உலமாக்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சங்கைக்குரிய உலமா இப்றாகீம் மௌலவி அவர்களினால் றமழான் சிந்தனையும், விசேட துஆப் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.

d d.jpg2 d.jpg2.jpg3

Web Design by The Design Lanka