டாக்காவை சென்றடைந்தார் மஹிந்த- இன்று பங்கேற்கும் நிகழ்வுகள் இதோ - Sri Lanka Muslim

டாக்காவை சென்றடைந்தார் மஹிந்த- இன்று பங்கேற்கும் நிகழ்வுகள் இதோ

Contributors

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் பங்களாதேஷ் சென்றடைந்தார்.

பங்களாதேஷிற்கு சென்ற இலங்கைப் பிரதமரை அந்நாட்டுப் பிரதமரால் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பும் இலங்கைப் பிரதமரை வரவேற்கும் முகமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் முதல்நாளான இன்றைய தினத்தில் பங்களாதேஷ் நாட்டு வெளிவிவகார அமைச்சர், மத்திய வங்கி ஆளுநருடனும் பிரதமர் சந்திப்பை நடத்தவுள்ளார்.

அத்துடன் பங்களாதேஷின் தேசத்தந்தை என அழைக்கப்படும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் ஜனன தினத்தின் விழாவிலும், 51ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் விழாவிலும் இன்று மாலை இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.

பங்களாதேஷ் தலைநகரான டாக்டாவில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியான இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார் என்பதோடு நிகழ்விலும் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team