டாக்டர் முகம்மது மௌலானாவுக்கு பிரியாவிடையும், பாராட்டும் » Sri Lanka Muslim

டாக்டர் முகம்மது மௌலானாவுக்கு பிரியாவிடையும், பாராட்டும்

a

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி; ஓய்வு பெற்ற மருதமுனையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஏ.ஆர்.எம்.எஸ்.முகம்மது மௌலானாவின் சேவையைப் பாராட்டி கௌரவித்த பிரியாவிடை நிகழ்வு வைத்திய சாலையின் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில்; பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தலைமையில் மருதமுனை அல்;-ஹிக்மா கனிஷ்ட வித்தியாலய திறந்த வெளியில் அண்மையில்(23-09-2017)நடைபெற்றது.

வைத்தியசாலையின் அபிருத்திச் சபையின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.சத்தார் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதில் பிரதம அதிதியா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் கலந்து கொண்டார்.

அதிதிகளாக கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஏ.ஜலீல், பொறியிலாளர் எம்.எஸ்.எம்.பஸீல், டாக்டர்களான ஏ.எல்.எம்.மிஹ்லார், ஏ.டபள்யூ சமீம்,ஜாபிர் ஆகியோர் டாக்டர் மௌலானாவுக்கு நினைவுச் சின்னம், பரிசுப்பொதி என்பன வழங்கி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் நிதிபதிகள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், அதிபர்கள்,வர்த்தகர்கள் உள்ளிட்ட ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

a a.jpeg2 a.jpeg2.jpeg3 a.jpeg2.jpeg3.jpeg66 a.jpeg2.jpeg55 a.jpeg2.jpeg66

Web Design by The Design Lanka