“டிரம்பின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை’’ - பாகிஸ்தான் காட்டம் » Sri Lanka Muslim

“டிரம்பின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை’’ – பாகிஸ்தான் காட்டம்

pak66

Contributors
author image

Editorial Team

டிரம்பின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை’’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறிஉள்ளார்.

பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானின் மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில்,  பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) கொடுத்துள்ளது. இதற்கு பிரதிபலனாக எதையும் பாகிஸ்தான் நமக்கு தரவில்லை. மாறாக, நமது தலைவர்களை (ஜனாதிபதிகள்) முட்டாள்களாக கருதி பொய்களை கூறி வந்து இருக்கிறது. ஏமாற்றியும் உள்ளது.

நாம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறோம். அதே நேரம் பாகிஸ்தான் அந்த பயங்கரவாதிகளுக்கு தனது நாட்டில் புகலிடம் அளித்து பாதுகாத்து வருகிறது. இனிமேலும் இதுபோல் நடப்பதை நம்மால் அனுமதிக்க முடியாது” என குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி டிரம்பின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கூறுகையில், ‘‘டிரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை நாங்கள் டுவிட்டர் மூலம் விரைவில் தெரிவிப்போம்’’ என்றார். ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் பேசுகையில், “நாங்கள் இதற்கு மேல் எதுவும் செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே அமெரிக்காவிடம் சொல்லி விட்டோம். எனவே டிரம்பின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை’’ என்று குறிப்பிட்டார். பாகிஸ்தான் அமெரிக்காவிடம் உதவி எதையும் நாடவில்லை, அவர்கள் உதவியை நிறுத்தட்டும் அல்லது தடை செய்யட்டும், அது அவர்களை பொறுத்தது.

பாகிஸ்தானுக்கு ஏன் நிதிஉதவி வழங்கினீர்கள் என்பதை டொனால்டு டிரம்ப் அமெரிக்க அரசிடம்தான் கேட்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார் கவாஜா ஆசிப்.

டொனால்டு டிரம்ப் பாணியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகமும் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், அமெரிக்காவிற்கு அல்கொய்தா பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் நிலம், வான் தகவல் தொடர்பு, ராணுவ தளங்கள், ஒத்துழைப்பினை 16 ஆண்டுகளாக அளித்து வந்தது. ஆனால் அவர்கள்தான் பாகிஸ்தானுக்கு கடுமையான வார்த்தைகளையும், நம்பிக்கையின்மையையும் தவிர எதையும் தந்தது இல்லை என தெரிவித்து உள்ளது.

Web Design by The Design Lanka