டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நதியில் பஸ் கவிழ்ந்தது: 36 பேர் சாவு » Sri Lanka Muslim

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நதியில் பஸ் கவிழ்ந்தது: 36 பேர் சாவு

பஸ் கவிழ்ந்து 36 பேர் சாவுv

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

மேற்கு வங்காளத்தில் பரிதாபம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நதியில் பஸ் கவிழ்ந்தது 36 பேர் சாவு.
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கரிம்பூரில் இருந்து மால்டாவுக்கு நேற்று அதிகாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 60 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் முர்சிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட தவுலத்தாபாத் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே சென்று கொண்டிருந்த நதியில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியும், தண்ணீரில் மூழ்கியும் பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்கு தாமதமானதாலும், நீண்ட காலமாக பாழடைந்து கிடக்கும் பாலத்தை சீரமைக்காததை கண்டித்தும் அப்பகுதியினர் போராட்டத்தில் இறங்கினர். இதில் சில போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.பஸ் டிரைவர் செல்போன் பேசியவாறே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றை முந்த முயன்றதால் விபத்து நடந்ததாக தெரிகிறது. இது குறித்து விசாரணை நடந்து .

பஸ் கவிழ்ந்து 36 பேர் சாவுv

Web Design by The Design Lanka