டுவிட்டர் பயன்படுத்துவதில் சவூதி முதலிடம், இந்தியா 21வது இடம் - Sri Lanka Muslim

டுவிட்டர் பயன்படுத்துவதில் சவூதி முதலிடம், இந்தியா 21வது இடம்

Contributors

வாஷிங்டன்: உலகிலேயே அதிகமாக டுவிட்டர் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் சவூதி முதலிடத்தில் உள்ளது. இந்தியா டுவிட்டர் பயன்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய இடத்திலேயே உள்ளது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பீர் ரீச் என்ற ஆய்வு நிறுவனம் கூறுகையில், இணையதளம் பயன்படுத்துவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது 32 சதவீதத்தினர் சவூதியில் டுவிட்டர் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

இந்தியா, நைஜீரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சார்ந்தோர் குறைந்த அளவே டுவிட்டர் பயன்படுத்துகின்றனர். அதாவது, ஒரு சதவீதமே பயன்படுத்துகின்றனர் என்று அந்த ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

மேலும், இந்த ஆய்வில் டுவிட்டலுள்ள வசதிகளை மக்கள் விரும்புகின்றனர்; அதில் உள்நுழைவதை விட மேலோட்டமாக பார்ப்பதையே மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்  என்று தெரிய வந்துள்ளது.

இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், அமெரிக்கா இந்த தளத்தை பயன்படுத்துதில் எட்டாவது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் ஆங்கிலம் பேசாத நாடுகளான, சவூதி அரேபியா, 32 சதவீதம் முதல் இடத்தில் உள்ளது. இதை பீர் ரீச் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சவூதி மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவது கம்யூட்டர் மூலமாக அல்ல; மொபைல் போன் மூலமே பயன்படுத்துகின்றனர்.

பெரிய நாடுகளான நைஜீரியா, ஜெர்மனி, இந்தியா போன்ற நாடுகளில் டுவிட்டர் பயன்பாடு இன்னும் குறைவாகவே உள்ளது. இந்தப் பட்டியலில் சீனா கிடையாது. ஏனென்றால் சீனாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மைக்ரோ வலைப்பதிவு பயன்படுத்தும் களத்தில் வெய்போ முதன்மையாக உள்ளது.

ட்டுவிட்டர் பயன்படுத்துவதில், 24 வயது உள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். இதில் ஆண்கள் 26 வயது உள்ளவர்களாகவும், பெண்கள் 22 வயது உள்ளவர்களாகவும் உள்ளனர். இளைஞர்கள் அதிகமாக டுவிட்டர் பயன்படுத்துகின்றனர். 20 சதவீதம்தான் டுவிட்டர் பயன்பாட்டாளர்களில் 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்று ஆய்வு கூறுகிறது.

இதில் முதல் 10 இடங்களில்  அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் சவூதி  அரேபியா, இந்தோனேசியா, ஸ்பெயின், வெனிசுலா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team