டெங்கு நோயை எதிர்கொள்வது எப்படி ? » Sri Lanka Muslim

டெங்கு நோயை எதிர்கொள்வது எப்படி ?

dengue

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Dr அலி உதுமான் அலி அக்ரம்

அக்கரைப்பற்று


இரண்டாயிரமாம் ஆண்டுகளிலிருந்து நமக்கு பழக்கப்பட்ட டெங்கு நோயானது சில சந்தர்ப்பங்களில் ஊரிலிருக்கும் ஓரிருவருக்கு வந்து அப்படியே அடங்கிவிடும், அல்லது “epidemic” ஆக உருவெடுத்து பலருக்குத் தொற்றி சில உயிர்களையும் காவியும் சென்றுவிடும்.

டெங்கு நோய் என்பது பற்றி நமக்கு நல்லவே அறிவிருக்கிறது. இது ஒரு வைரஸ் காய்ச்சல், பகலிலே கடிக்கும் காலில் வெள்ளை வரைகள் கொண்ட ஈடிஸ் எனும் நுளம்பால் பரவும் என்றெல்லாம்.

ஒருவருக்கு டெங்குத் தொற்று ஏற்படுமானால் பின்வரும் நான்கு வகைகளில் ஒன்றாக அவர் காணப்படுவார் –

1. பூரண தேகாரோக்கியத்துடன் இருப்பார் –

இதனை நாம் “subclinical infection” என்று கூறுகிறோம். இவர்களுக்கு சிறு காய்ச்சல் கூட இருக்காது. பிற்காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் Dengue IgG எனும் பரிசோதனையை செய்யும் போது அது positive ஆக இருக்கும். இதன் அர்த்தம் – டெங்குத் தொற்றொன்று நிகழ்ந்திருக்கிறது என்பதாகும்.

2. சாதாரணமான வைரஸ் காய்ச்சல் –

இவர்கள், சாதாரணமான வைரஸ் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்கள் போல் மெல்லிய காய்ச்சல், தலைவலி, மெல்லிய உடல்வலியோடு இருந்து, இரண்டு அல்லது மூன்று நாட்களில் பூரண குணமடைவர். இவர்களும் தங்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது என பெரும்பாலும் ஊகிப்பதுமில்லை, மற்றும் மருத்துவரை நாடுவதுமில்லை. ஏனெனில் இரு நாட்களில் காய்ச்சல் குணமடைவதாலாகும். பிற்காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் Dengue IgG எனும் பரிசோதனையை செய்யும் போது அது positive ஆக இருக்கும். இதன் அர்த்தம் – டெங்குத் தொற்றொன்று நிகழ்ந்திருக்கிறது என்பதாகும்.

3. டெங்குக் காய்ச்சல் –

இவர்களுக்கு உயர் காய்ச்சலும், தலையிடியும், கடும் உடல்வலியும் மற்றும் வாந்தி போன்றவை காணப்படும். இந்தக்காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேலாகச் செல்லும். ஆகக்குறைந்தது ஐந்து நாட்களாவது கடும் காய்ச்சலாகவே இருக்கும். மேலதிகமாக உடம்பில் சிறுசிறு சிவப்புப் புள்ளிகள் தென்படும், சில சந்தர்ப்பங்களில் முரசிலிருந்து இரத்தம் கூட வெளியேறலாம். எனவே, எந்தவொரு காய்ச்சலும் மூன்று நாட்களுக்கு மேலாகச் செல்லுமானால் மூன்றாம் நாளிலேயே full blood count ஒன்று செய்வது சிறந்தது.

4. டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் –

இங்கு ‘குருதிப்போக்கு’ என்று கூறியதற்காக இந்த வகையான டெங்குவில் நடைபெறுவது குருதிப்போக்கை விட, எமது இரத்தத்தில் இருக்கும் திரவவிழையம் (இரத்தம் = திரவவிழையம் + கலங்கள்) எமது நாளங்களை விட்டு வெளியேறுவதே (plasma leakage) பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாகும்.

இந்த plasma leakage நடைபெறுவது காய்ச்சல் வந்து நாலாவது அல்லது ஐந்தாம் நாளாகும். இந்த சந்தர்ப்பத்தில் அவருக்குக் காய்ச்சல் சற்றுக் குறைவடையும் (மூன்றாவது வகையான சாதாரண டெங்குக் காய்ச்சல் போல) – எனவே வீட்டார் சிந்திப்பர் அவர் குணமடைந்துவிட்டார் என. ஆனால், இரத்தக்குளாயிலிருக்கின்ற இரத்தத்தின் plasma வெளியேறுவதால் கலங்கள் மட்டும் நாடிகளிலும் நாளங்களிலும் தேங்க ஆராம்பிக்கும், அதாவது குருதிச்சுற்றோட்டம் முக்கியமான அங்கங்களுக்குத் தடைப்படும் – இதிலே மூளை, சிறுநீரகம் மற்றும் ஈரல் என்பன பாதிக்கப்படும். இதனை “Dengue Shock Syndome” என்று கூறுவோம்.

இந்த plasma leakage நடைபெறுவது இரண்டு நாட்களுக்கு (48 மணித்தியாலங்கள்) மாத்திரமே (காய்ச்சல் வந்து ஐந்தாவது வெளியேற ஆரம்பதித்த plasma, ஏழாவது நாள் மீண்டும் இரத்தக்குழாய்களால் அகத்துறுஞ்சப்பட்டுவிடும்). இந்த 48 மணித்தியாலங்களை ‘critical phase’ என்று கூறுகிறோம்.

இந்த 48 மணித்தியாலங்களும் ஒருவர் intensive monitoring ல் இருப்பார். அவரின் plasma leakage யை சமப்படுத்துவதற்காக அவருக்கு saline அல்லது ஜீவனி வழங்கப்படும். அவருடைய நாடித்துடிப்பு வீதம், பிறசர், சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு என்பன கண்காணிக்கப்படும்.

எனவே – எவ்வாறு டெங்கு நோயை எதிர்கொள்ளாலாம் எனப் பார்ப்போம் –

1. இரண்டு இல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை தமது முற்றத்தை பரிசீலித்து ஏதாவது டயர், யோக்கட் கப், போன்றவற்றை அகற்றுதல். டெங்கு நுளம்பானது இரண்டு – மூன்று கிலோமீற்றர் தூரம் பறந்து செல்லவல்லது.

2. நமது வீடுகளிலுள்ள பாவிபடாத tank களையும் permanent ஆக மூடிவிடுவது நல்லது.

3. வீட்டிலுள்ளவர்கள் யாவரும் ஏதாவது ஒரு mosquito repellent யை பாவிப்பது நல்லது.

4. சிறுவர்களுக்குக் காய்ச்சல் வந்தால் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டு ஓய்வெடுக்கச் சொல்ல வேண்டும். காய்ச்சல் பூரணமாகக் குணமாகும் வரை எந்தவொரு விளையாட்டுக்கும் அவர்களை அனுப்புவது கூடாது.

5. காய்ச்சல் வந்து மூன்றாவது நாள் கட்டயமாக ஒரு “full blood count” ஐ செய்ய வேண்டும்.

6. காய்ச்சலுக்கு panadol (paracetamol) யைத் தவிர வேறு எந்தவொரு மருந்தையும் வீட்டில் கொடுக்காமல் இருத்தல். முக்கியமாக ‘Brufen’ (இது – டெங்குக்காய்ச்சலில் இரத்தப்போக்கை அதிகரிக்கும்)

7. டெங்குக்காய்ச்சல் கருவிலுள்ள சிசுவையும் தாக்கவல்லது என்பதனால் கர்ப்பிணித்தாய்மார்களும் வீட்டில் நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்தல்.

டெங்குக் காய்ச்சலினால் ஏற்படும் பெரும்பாலான மரணங்கள் – நான் கூறிய critical phase ல் ஏற்படுகின்ற Dengue Shock Syndrome இனாலேயே நிகழ்கிறது. இது வீட்டிலிருந்து காலதாமதமாகி வைத்தியசாலைக்கு வருவதாலேயே ‘அதிகம்’ நிகழ்கிறது.

Web Design by The Design Lanka