டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுரங்க லக்மால் பந்து வீச்சில் உலக சாதனை » Sri Lanka Muslim

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுரங்க லக்மால் பந்து வீச்சில் உலக சாதனை

su

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுரங்க லக்மால் தான் வீசிய 46 பந்துகளுக்கு ரன்களை விட்டுக்கொடுக்காது சாதனை

முதல் ரன்னை விட்டுக்கொடுக்கும் முன், அதிக பந்துகளை கட்டுப்படுத்திய வீரர் என்ற சாதனையை இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக, போட்டி நண்பகலில்தான் தொடங்கியது. முதல் நாள் வீசப்பட்ட முதல் பந்திலேயே லோகேஷ் ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல்.

முதல் நாள் போட்டியில் 6 ஓவர்கள் வீசிய அவர், ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை. இரண்டாம் நாளும் தொடர்ந்து பந்துவீசிய லக்மல், தனது 47 வது பந்தில்தான் முதல் ரன்னை கொடுத்தார். இதன் மூலம் முதல் ரன்னை விட்டுக்கொடுக்கும் முன் அதிக பந்துகளை கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன் 2002-ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெய்லர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 40 பந்துகள் வரை ரன் கொடுக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் படைத்துள்ளார்.

Web Design by The Design Lanka