டொனால்ட் டிரம்பின் தோல்வி, விவாகரத்து செய்யவுள்ள அவரின் மனைவி..?? » Sri Lanka Muslim

டொனால்ட் டிரம்பின் தோல்வி, விவாகரத்து செய்யவுள்ள அவரின் மனைவி..??

Contributors
author image

Editorial Team

டொனால்ட் டிரம்பினை அவரது மனைவி மெலேனியா டிரம்ப் விவாகரத்து செய்யவுள்ளார் என டெய்லிமெயில் தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் அந்த நிமிடத்திற்காக மெலேனியா காத்திருக்கின்றார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

டெய்லி மெயில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோற்றுவிட்டார், அவர் தனது மனைவியையும் இழக்கவுள்ளார். 2016 இல் டிரம்ப் வெற்றிபெற்ற வேளை மெலேனியா டிரம்ப் கண்ணீர் விட்டு அழுதார் என தகவல் ஒன்றுள்ளது. தனது கணவர் வெற்றி பெறுவார் என்பதை அவர் நினைத்தும் கூட பார்க்கவில்லை என மெலேனியாவின் நண்பியொருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த வெற்றிக்கு ஐந்து மாதங்களின் பின்னரே அவர் நியுயோர்க்கிலிருந்து வோசிங்டன் சென்றார். அவர்களின் மகனின் பாடசாலை கல்வி பூர்த்தியாவதற்காகவே அவர் காத்திருந்தார் என்பது அவ்வேளை வெளியான தகவல்.

ஆனால் அந்த ஐந்து மாதமும், மெலேனியா டிரம்பின் சொத்துக்களில் தனது மகன் பாரனிற்கு சம உரிமையை வழங்க வேண்டும் என்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் என மெலேனியாவின் முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி தெரிவித்திருந்தார்.

டிரம்ப் தம்பதியினர் வெள்ளை மாளிகையில் தனித்தனி படுக்கையறைகளை கொண்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் உதவியாளர் ஒருவர் டிரம்ப் தம்பதியினரின் 15 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் எப்போது பதவியிலிருந்து வெளியேறுவார்? தான் எப்போது அவரை விவாகரத்து செய்யலாம்? என மெலேனியா ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணிக் கொண்டிருக்கின்றார் என அந்த உதவியாளர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பதவியிலிருக்கும் போதே அவரை விவாகரத்து செய்து டிரம்பிற்கு மிகப்பெரும் அவமானத்தை மெலேனியா ஏற்படுத்தியிருந்தால் மெலேனியாவை பழிவாங்குவதற்கு டிரம்ப் ஒரு வழியை கண்டுபிடித்திருப்பார் என அந்த உதவியாளர் தெரிவித்துள்ளார்.

திருமண வாழ்க்கையில் நெருக்கடியான தருணங்களை சந்தித்த போதிலும் 50 வயதான மெலேனியா தனது கணவருடன் மிகச்சிறந்த உறவுள்ளது என தெரிவித்து வருகின்றார். தாங்கள் ஒருபோதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது இரண்டாவது மனைவியை திருமணம் செய்வதற்கு முன்னர் தன்னை பற்றி விமர்சித்து அவர் பேட்டிகளை வழங்ககூடாது நூல்களை எழுதக்கூடாது என ஒப்பந்தம் செய்துகொண்டார். மெலேனியாவுடனும் அவ்வாறான ஒப்பந்தம் இருக்கலாம் என்கின்றனர் விமர்சகர்கள்.

Web Design by Srilanka Muslims Web Team