சட்டக்கல்லூரி வினாத்தாளை சர்வதேச மொழிக்கு மாற்றுவது நியாயமா? -இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி - Sri Lanka Muslim

சட்டக்கல்லூரி வினாத்தாளை சர்வதேச மொழிக்கு மாற்றுவது நியாயமா? -இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி

Contributors
author image

S.Ashraff Khan

இரு மொழிகளால் இதயபூர்வமாக ஒன்றிணைந்த ஒரே இலங்கை தேசம் என்று கூறிக் கொண்டு, சட்டக்கல்லூரி வினாத்தாளை சர்வதேச மொழிக்கு மாற்றுவது நியாயமா? என்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

இது விடயமாக சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ், தேசிய பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம். சலீம் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதுவரைகாலமும் சட்டக்கல்லூரியில் நடாத்தப்பட்ட சகல பரீட்சைகளின் போதும் மும்மொழிகளிலும் வழங்கப்பட்டுவந்த வினாத்தாள்கள் தற்போது சர்வதேச மொழி யான ஆங்கில மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதனை சட்டத்துறை தாய்மொழிக்குச் செய்யும் துரோகமாகவே சங்கம் கருதுகின்றது. தாய் நாட்டை, தாய்மொழியை நேசிக்கின்ற எந்த ஒரு மகனும் இதனை ஏற்க மாட்டான்.

 

தமிழ்,சிங்களம் என்பவற்றை சுதேச(தாய்) மொழிகளாகவும், ஆங்கிலத்தை சர்வதேச (இணைப்பு) மொழியாகவும் பிரகடணம் செய்துள்ள அரசு, சகல பிரசைகளும் அரச நிறுவனங்களுக்குள் சிங்களத்தில் அல்லது தமிழில் தமது சேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்கு சட்டபூர்வமான உரிமையுண்டு என்றுகூறி, இந்த மொழி களின் அமுலாக்கத்திற்காக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சொன்றையும் உருவாக்கி, அதற்கு அனுபவமும் தேர்ச்சியுமிக்க அமைச்சர் ஒருவரையும் நியமித்து, அதற்கு மேலதிகமாக அரச கரும மொழிகள் ஆணைக்குழு வொன்றையும் தாபித்து, செயற்படுத்தி வருகின்ற நிலையில் தாய் மொழிக்கு சட்டக் கல்லூரியில் இடம் இல்லாமல் போவதை எவராலும் ஏற்க முடியாது.

 

இதற்கு மேலதிகமாக சகல அரசதுறை ஊழியர்களும், தமிழ்மொழி ஊழியர்கள் சிங்களத்தையும், சிங்கள மொழி ஊழியர்கள் தமிழையும், ஆங்கில மொழி ஊழி யர்கள் தமிழையும், சிங்களத்தையும் இரண்டாம் மொழியாகக் கற்க வேண்டும் என்ற சட்டத்தையும் கட்டாயமாக்கியுள்ள நிலையில், சட்டத்துறை ஆங்கிலத்தை பரீட்சை மொழியாக்குவதை எவ்வாறு ஏற்க முடியும்.

 

இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது உறுப்புரையின் முதலாவது பந்தியின்படி இலங்கையின் அரச கரும மொழி சிங்களமாகும். 13ஆவது அரசிலமைப்பு திருத் தத்தின் பின்னர், இரண்டாவது பந்தியின்படி தமிழ் மொழியும் அரச கரும மொழி யாகும், மூன்றாவது பந்தியின்படி ஆங்கில மொழி இணைப்பு மொழியாகும். நான் காம் பந்தின்படி (இவ்வத்தியாயத்தின் பிரிவு ஐஏ இன் ஏற்பாடுகளுக்கமைய) அரச கருமமொழிகளை அமுலாக்குவதற்கு 1651/20ஆம்இலக்க வர்த்த்தமானி அறிவித்தல் மூலம் தாபிக்கப்பட்ட தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், 1991/18ஆம்இலக்கச் சட்டத்தின்மூலம் தபிக்கப்பட்ட அரச கருமமொழிகள் ஆணைக் குழுவும் செயற்படுகிறது.
 
 
இலங்கை அரசியலமைப்பின் 24ஆவது உறுப்புரையின்படி சிங்களமும், தமிழும் நீதிமன்றங்களின் மொழிகளாக இலங்கை எங்கிலும் இருத்தல் வேண்டும். அரசியல மைப்புச் சட்டங்கள் இவ்வாறிருக்க, சட்டக் கல்லூரி மட்டும் எவ்வாறு பரீட்சை வினாத்தாளை ஆங்கில மொழியில் மட்டும் வழங்க முடியும். முன்பிருந்தபடி மும் மொழி அமுலாக்கத்திற்கு அமைச்சும், ஆணைக்குழுவும் ஆவன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team