தகுதியற்ற அமைச்சர்களை வைத்துக் கொண்டு தள்ளாடும் அரசாங்கம்..! - Sri Lanka Muslim

தகுதியற்ற அமைச்சர்களை வைத்துக் கொண்டு தள்ளாடும் அரசாங்கம்..!

Contributors
author image

எப்.முபாரக்

தகுதி அற்ற அமைச்சர்களை தன்வசம் வைத்திருக்கும் அரசாங்கம் தள்ளாடும் நிலைக்கு வந்தும் உணரமுடியாத நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் இருப்பது சிந்திக்க வேண்டிய விடயம் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(8) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
நாட்டிலுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது, இந்த நிலை தொடருமானால் நாடு ஒரு பாரிய பொருளாதா, நல்லிணக்க மற்றும் இனங்களுக்கு இடையில் உள்ள புரிந்துணர்வு போன்றவற்றில் ஒரு பாரிய வித்தியாசத்தை கொண்டு வரும். எமது நாட்டின் எதிர்காலம் தலைகீழாகும் அபாயம் ஏற்படலாம்.
சிறுபான்மை இனத்தை நசுக்க குறிவைத்த இந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச நாடுகளுடன் பின்னி பிணைந்த வர்த்தக மற்றும் கல்விசார் துறைகளில் நெருக்கத்தை ஏற்ப்படுத்த ஒரு பாரிய சர்வதேச உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை ஒருபோது தனித்து நின்று சீனாவின் அனுசரணையில் வாழ முடியாது மாறாக அனைத்து நாடுகளுடனும் இராஜதந்திர உறவை பேனவேண்டும்.
இதற்கான நடவடிக்கையை இந்த அரசாங்கம் விட்ட பிழைகளை படிப்பினைகளாக கொண்டு சிறுபான்மை இனமான தமிழ் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க இனங்களை  திருப்தி படுத்தும் நாடாக மாற்றவேண்டும்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை கேட்க்கும் எந்த ஒரு சிறுபான்மை கட்சிகளாலும் இந்த அரசாங்கத்துக்கோ அல்லது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கோ எந்த ஆபத்தும் கிடையாது மாறாக பெரும்பான்மையினரின் சிறு இனவாத கட்சிகளே இந்த அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் ஆபத்தானவர்கள் ஆகும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team