தங்க கால்பந்து யாருக்கு? போட்டியில் முன்னணி வீரர்கள் - Sri Lanka Muslim

தங்க கால்பந்து யாருக்கு? போட்டியில் முன்னணி வீரர்கள்

Contributors

சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரருக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் தங்க கால்பந்து விருதுக்கு இம்முறை 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அவர்களில் லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜெண்டினா), ஃபிராங் ரிபெரி (பிரான்ஸ்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), கேரத் பேல் (வேல்ஸ்), நேமர் (பிரேசில்) உள்ளிட்டோரும் அடங்குவர்.

1994-ம் ஆண்டு வரை பாலன் டி’ஓர் (தங்க கால்பந்து) விருதை ஐரோப்பிய வீரர்கள் மட்டுமே பெற்று வந்தனர். அந்த விதிமுறையானது 1995-ம் ஆண்டில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பு முறையில் இந்த விருதைப் பெறுபவர் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர் யார் என்று அணிகளின் பயிற்சியாளர்கள், அணித்தலைவர்கள், ஊடகவியலர்கள் ஆகியோர் வாக்களித்து தேர்வு செய்வர்.

அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி இந்த விருதைப் பெறுபவர் யார் என்று அறிவிக்கப்படும்.

4 ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்க கால்பந்து விருதைப் பெற்று வரும் மெஸ்ஸி, இந்த முறையும் அவ்விருதைப் பெறுவோர் பட்டியலில் உள்ளார்.

2012-13 சீசனில், சிறந்த வீரருக்கான ஐரோப்பிய விருதைப் பெற்ற ரிபெரி, இம்முறை தங்க கால்பந்தை வெல்லாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
லிவர்பூல் அணி வீரரான லூயிஸ் செüரஸýம் இவ்விருதுக்கான தேர்வுக் களத்தில் உள்ளார்.

பயிற்சியாளர் விருது: ஃபிஃபா பயிற்சியாளர் விருதுக்கு 10 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் அலெக் ஃபெர்கியூஸன், பேயர்ன்ஸ் மேலாளர் ஹிநெக்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team