தஜாப்தீனின் இடைநிறுத்தத்தை தலைவர் ஹக்கீம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் - நாவிதன்வெளி மக்கள் கோரிக்கை - Sri Lanka Muslim

தஜாப்தீனின் இடைநிறுத்தத்தை தலைவர் ஹக்கீம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – நாவிதன்வெளி மக்கள் கோரிக்கை

Contributors

-எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரஊப்ஹக்கீம் மத்திய முகாமில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கட்சியின் தலைவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டதையும் பொருட்படுத்தாது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதுவிடயமாக சம்மந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ரஊப் ஹக்கீம் மேலும் காட்டமாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என நாவிதன்வெளி பிரதேச பெரும்பாலான முஸ்லிம் மக்கள் தலைவர் ரவுப் ஹக்கீமை கேட்டுள்ளனர்.
கட்சி கட்டுப்பாட்டை மீறுவதோ தலைமைத்துவத்தை மதிக்காத தன்மையோ உறுப்பினர் தஜாப்தீன் இடம் இல்லை. அவருக்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் இருப்பதாக மனம் புலம்புகின்றார்.
முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் யானைகளின் அட்டகாசம் காணப்படுகிறது வெளிச்சம் போடுங்கள் என உறுப்பினர் தஜாப்தீன் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் அதற்கு தவிசாளர் இரவில் அங்கெல்லாம் உனக்கென்ன வேலை விபச்சாரம் புரியவா போகப் போகிறாய் என கேட்டதாக உறுப்பினர் தஜாப்தீன் புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு விடயதுக்காகத் தான் அவர் கட்சி தலைமை கூறியதையும் கேட்காமல் இருக்கின்றார். போருள் ,பணம் ,சொத்து என்பவற்றை விடவும் அதற்கு மேல் கட்சி,தலைமைத்துவம் என்பவற்றிக்கும் மேலாக தன்மானம் என்பதை அவர் கடினமாக பார்கின்றார்.
கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை சற்று பிற்படுத்தி அவருக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை போக்க கட்சியும் தலைமைத்துவமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஜாப்டீனுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை தலைமைத்துவதுக்கோ அல்லது செயலாளருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களுக்கோ ஏற்பட்டிருந்தாலும் அவர்களும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பார்கள்.
தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலமைத்துவதுடன் தஜாப்தீனின் முறைப்பாடு பற்றி பேசியதன் பின்னரே இந்த முடிவை எடுக்க வேண்டும் என அந்த பிரதேச மக்கள் கேட்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team