தடுப்பூசிக்கு லஞ்சம் வாங்கிய நகர சபை ஊழியர் கைது..! - Sri Lanka Muslim

தடுப்பூசிக்கு லஞ்சம் வாங்கிய நகர சபை ஊழியர் கைது..!

Contributors

கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி 1000 ரூபா லஞ்சம் பெற்ற கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவர் மருதானை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் கைதின் போது, அவர் வசம் 20,000 ரூபா பணம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ அதிகாரியொருவரின் உதவியாளராக பணியாற்றிய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team