தடுப்பூசியை வழங்க சீனா காத்திருப்பு-இலங்கை இழுத்தடிப்பு? - Sri Lanka Muslim

தடுப்பூசியை வழங்க சீனா காத்திருப்பு-இலங்கை இழுத்தடிப்பு?

Contributors

கொரோனா தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு சீனா, இலங்கையின் அனுமதியினைப் பெறுவதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள Sinopharm கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இலங்கையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைத் தூதரகம் சீனாவின் இரண்டு தடுப்பூசி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி, சீன அரசாங்கம் இலங்கை இரண்டு கட்டங்களாக 6 இலட்சம் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team