தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் : முதியோர்களும், கற்பிணி தாய்மார்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி பெற வருகைதந்தனர் ! - Sri Lanka Muslim

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் : முதியோர்களும், கற்பிணி தாய்மார்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி பெற வருகைதந்தனர் !

Contributors

நூருல் ஹுதா உமர்

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்று நிலையங்களில் இன்று வழங்கப்பட்டு வருகிறது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார்.

வொலிபேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதான வீதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, அல்-ஜலால் பாடசாலை முன்பாக அமைந்துள்ள கிளினிக் சென்டர் ஆகிய நிலையங்களில் காலை 8.00 மணி தொடக்கம் வழங்கப்பட்டுவரும் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள பிரதேச கற்பிணித்தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் உட்சாகத்துடன் வருகைதருவதாகவும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க பல்வேறு உதவிகளை செய்துவருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதுவரை தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ளாதவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே போன்று காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை போன்ற சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசிகளை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team