தனது அனைத்து ஏழு குழந்தைகளையும் தீயில் இழந்த முஸ்லிம் தாய் » Sri Lanka Muslim

தனது அனைத்து ஏழு குழந்தைகளையும் தீயில் இழந்த முஸ்லிம் தாய்

jj

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE), புஜைரா எனும் பிரதேசத்தில் வசிக்கும் அந்நாட்டின் பிரஜையான விதவைத் தாய், கடந்த 2018 ஜனவரி 22ஆம் திகதி இரவு குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் இயங்கிக் கொண்டிருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூச்சுத் திணரலுக்குள்ளாகி தனது அனைத்து ஏழு குழந்தைகளையும் இழக்க வேண்டி ஏற்பட்டது.

இவ்விபத்தில் மரணித்தவர்கள் சாரா, சுமையா ஆகிய இரட்டைக் குழந்தைகள் (வயது 5), அலி (வயது 9), ஷெய்க்கா(வயது 10), அஹ்மத் (வயது 11), கலீபா (வயது 13), ஷூக் (வயது 15). இவர்களின் தந்தை கடந்த வருடம் மரணித்த நிலையிலேயே இந்த துயரகரமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சக்கரை நோயாளியான குழந்தைகளின் தாய் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையின் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் இன்சுலின் எடுப்பதற்காக தனது அறையை விட்டு வெளியே வரும்போது குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் தீ பரவுவதை கண்டுள்ளார்.

மிகவும் அச்சத்துடன் தனது உறவினர்களை உதவிக்கு அழைத்ததோடு, பொலீசாருக்கும் தெரிவித்திருந்தார். அவசர சிகிச்சைப் பிரவினர் சம்பவ இடத்தை அடைந்த போது குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதாக அறியப்பட்டது. தீயானது அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

மரணித்த சிறுவர்களுக்காகவும், தனது குழந்தைகளை இழந்து தவிக்கும் தாய்க்காகவும் அனைவரும் பிரார்திப்போமாக. எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை குழந்தைகளுக்கு வழங்குவதோடு, குழந்தைகள இழந்து தவிக்கும் தாய்க்கு மன நிம்மதியையும், ஈருலக வெற்றியையும், மறுமையில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் கொடுப்பானாக.       

Web Design by The Design Lanka