தனது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனத்தை பறித்ததற்கு சமூக வலைத்தளத்தில் கவலை வெளியிட்ட அமைச்சர் விமல்..! - Sri Lanka Muslim

தனது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனத்தை பறித்ததற்கு சமூக வலைத்தளத்தில் கவலை வெளியிட்ட அமைச்சர் விமல்..!

Contributors

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் லங்கா பொஸ்பேட் நிறுவனம் தொடர்பில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த பதிவில், பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை தான் இலாபம் பெறும் நிலைக்கு மாற்றிய பின்னர் அது வேறு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கீழ் இருந்த லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் கீழ் கொண்டு வரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team