தனது சொந்த சமூக வலைத்தளத்தை போலியானது என மறுத்தார் தவம் : அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணை ! » Sri Lanka Muslim

தனது சொந்த சமூக வலைத்தளத்தை போலியானது என மறுத்தார் தவம் : அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணை !

Contributors
author image

Editorial Team

நூருல் ஹுதா உமர் 

A.L. THAVAM என்ற அவருடைய சொந்த முகநூலை தன்னுடைய முகநூல் இல்லையென்றும், அதிலே எனக்கு எதிராக போடப்பட்ட பதிவும் என்னுடையது அல்லவென்றும் வாதாடினார். இது சம்மந்தமான விசாரணையானது  காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3மணி வரையும்  மூன்று சுற்று விசாரணையாக தொடர்ந்தது. தன்னுடைய சொந்த ஜடியை தன்னுடைய ஐடியில்லை என்று  தவம் அவர்கள் கூறுவதன் மூலம் முழு பூசணிக்காயை  ஒருபிடி சோற்றுக்குள் மறைக்க முயல்வதுபோன்றே தோன்றியது என பிரபல வர்தகரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எச்.எம். இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த மாதம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், போலியான முறையில் புகைப்படம் ஒன்றை உருமாற்றம் செய்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டதனால் தனது பெயருக்கும் கௌரவத்திற்கும் அபகீர்த்தியை உண்டாக்கினார். இதன் மூலம் சமூகத்தில் தனக்கிருந்த நல்லபிப்பிராயம் கேள்விக்குட்பட்டது என கல்முனை பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,  

நான் பொலிசாரின் முன்னிலையில் கூறினேன் இந்த ஐடி அவருடையது இல்லையென்பது  உண்மையென்றால், புனித குர்ஆனின் மீது சத்தியம் செய்யுங்கள்  அப்படி சத்தியம் செய்தால் நான் எனது முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக்கொள்கின்றேன் என்றேன். அதனை பொலிசாரும் சரியானது என்றே ஏற்றுக்கொண்டனர். ஆனால் சத்தியம் செய்ய நான் தயாரில்லை என்று முற்றாகவே அவர் மறுத்துவிட்டார்.

இதன் காரணமாக இந்த ஐடியானது தவம் அவர்களின் சொந்த ஐடிதான் என்பது ஊர்ஜீதமானது. அதனால் இருசாராருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையை  தொடர்வதாக பொலிசார் எங்களுக்கு அறிவித்தனர்.  சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்புகிறோம் என்றார்.

கடந்த இரண்டு தடவைகள் பொலிஸாரின் விசாரணைக்கு சமூகம் தராமல் தவிர்த்துவந்த ஏ.எல்.தவம் மூன்றாவது தடவையே பொலிஸாரின் விசாரணைக்கு சமூகமளித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Web Design by The Design Lanka