தனது தற்கொலை முயற்சியை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர். - Sri Lanka Muslim

தனது தற்கொலை முயற்சியை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்.

Contributors

தனது தற்கொலை காட்சியை இணைய தளத்தில் ஒரு வாலிபர் நேரடியாக ஒளிபரப்பினார்.

வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்தார்.

அதன்படி தான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினார். அதை ஒரு சிலர் மட்டுமே பார்க்கவில்லை. இவனுக்கு வேறு வேலை இல்லை என கூறி இணையதளத்தை ‘ஆப்’ செய்தனர்.

ஆனால், பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். தொடக்கத்தில், மாணவர் ஸ்டீபன் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் ஓட்கா மதுவை குடித்தார்.

இதைத்தொடர்ந்து தனது அறையில் தீ வைத்து கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். அக்காட்சியை குரூர புத்தி கொண்ட 200 பேர் நேரில் பார்த்து ரசித்தனர். மேலும் அவர் தற்கொலை முயற்சியை உற்சாகப்படுத்தி அவரது மரணத்தை தூண்டினர்.

இதற்கிடையே மனிதாபிமானம் உள்ள சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்து அவரை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினர்.

Tragic: 'Stephen', 20, allegedly tried to kill himself on 4chan about 7pm Saturday night

'Stephen', using the name 'LOLdoge', set up a camera to film his suicide attempt

 

Web Design by Srilanka Muslims Web Team