தனிநபர்மாற்றம் » Sri Lanka Muslim

தனிநபர்மாற்றம்

politics

Contributors
author image

Fahmy Mohideen

எந்தவெரு சமூகமாற்றமும் தனிமனித மாற்றங்களின் மூலம் உயிர் பெறுகிறது.மாற்றத்திற்கான புரட்சி என்பது எமது தனிப்பட்ட உணர்வுகளில் இருந்துதான் முதலில் படையெடுக்க வேண்டும்.ஒவ்வொரு மனிதநேயமும் மாற்றத்தை விரும்பாமல் இல்லை.ஆனால் தனது சுயநலம் மற்றும் குறுகிய தேவைகளுக்காக தனக்காக மட்டும் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கபடுகிறான்.அல்லது தன்னை தானே நிர்ப்பந்திக்கிறான்.அதேநேரம் சமூகப் புரட்சி என்பது ஆயுதம் ஏந்துவதால் முழுமைப்பட முடியாது.அதிகமான ஆயுதங்களால் உருவான மாற்றமும் புரட்சிகளும் நீண்டகாலம் தொடர்ந்த வரலாறு இல்லை.சமூகத்தால் மாற்றத்தை நோக்கி உருவான ஆயுதமில்லாத புரட்சிகள் வரலாறு கண்டுள்ளது.

ஆயுதப் புரட்சி எப்போதும் ஒருபக்க வெற்றிகளை மட்டுமே தக்கவைக்கும். ஆனால் எமது உணர்வுகள் மூலம் மாற்றத்தை உருவாக்க ஆரம்பிக்கும் புரட்சி முழுசமூகத்தையும் வெற்றியாளராகவும்,,பங்காளராகவும் மாற்றும்.ஆயுதத்தில் நம்பிக்கை வைத்ததால் அறிவுபூர்வமான பல போராட்டங்கள் இறுதியில் தோல்விகண்டது.இதற்கு லிடுதலைப்புலிகளின் சர்வதேச ரீதியில் பலம்பெற்ற போராட்டம் May 19 இலே முடிவடைந்தது.

நாம் வாழ்கின்ற வாழக்கையின் ஒவ்வொரு நாளில் ,,ஒருநிமிடமாவது எங்களது சிந்தனையை பொதுமைப்படுத்த வேண்டும். நம்மை சுயமாக சிந்திக்காமல் இருக்க தொழிநுட்பம் இயலுமானவரை வாழ்க்கையை வேகமாகவும் இலகுவாகவும் மாற்றியுள்ளது.இந்த வேகமான நாகரீகம் தனக்கு மட்டுமானதை மட்டுமே தேடவும்,அடையவும் மட்டுமே தனிநபரை நிர்ப்பந்திக்கிறது.குறிப்பாக தொழிநுட்பம் மார்க்கத்தில் இருந்து மட்டுமல்ல சமூகத்தில் இருந்து தனிநபரை தூரமாக்கி வைக்கிறது.

உண்மையில் பிறரைக் காயப்படுத்தாத,,பிறரிடம் இருந்து தட்டிப் பறித்துக் கொள்ளாத மனித விழுமியங்கள் கூடிய வாழ்க்கையே தேவையாக உள்ளது.இதன் மூலமே தனிமனித விழுமியங்கள் சமூகமயமாக்களில் பலமடையும்.மாறாக காட்டில் ஒன்றை அழித்தே மற்றது வாழவேண்டும் என்ற காட்டுவிதிகளுக்கு ,,இன்று மனிதநேயம் பழியாகிவிட்டது.இதனால் மற்றவனின் தாழ்விலும்,வீழ்ச்சியிலும்,சரிவிலும் தனக்கு சாதகத்தை தேடுபவனாக மனிதன் மாறிவிட்டான்.இதனால் இனத்தின் பெயரால்,கொள்கையின் பெயரால் என்று பல்வேறு மோதல்களை தனக்குச் சாதகமாக மனிதன் தேடிக் கொள்கிறான்.

தனிநபர்கள் சமூகம்சார்ந்த பிரச்சனைகளை பலநிமிடங்களாக விவாதிக்கின்ற போதும்,அதற்கான தீர்வினை காண்பதில் உடன்பாடு காணமுடியாதுள்ளது.காரணம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை வைத்தே சமூகத்தின் பிரச்சனையை குருகிய வட்டத்திற்குள் நின்று நோக்குவதாகும்.

பிரச்சனைகள் வெறுமனே விவாதிக்கவும்,விளம்பரம் செய்யவுமே இன்று சமூகத்தில் தேவைப்படுகிறது.தனிப்பட்ட தேவைகளும்,தனக்குரிய அட்டவணையுமே சமூகத்தில் தனிமனிதனின் முதன்மைப்படுத்தலாக அமைந்துள்ளது.

இந்த குறுகிய வட்டத்திற்குள் நின்று பரந்த சமூகத்தின் பங்காளிகளாக பேச்சளவிலே தனிநபரின் வாழ்நாள் நகர்கிறது.தான்வாழும் சமூகத்தில் எந்தவிடயத்திலும் பொதுமைப்பட அல்லது சமரசமாக முடியாத வகையில் தனிமனித தேவைகள் அதிகரித்துவிட்டது.

ஆகவே சமூகமாற்றம் அல்லது புரட்சியை பேசுகின்றவர்களிடம் மாற்றம் தேவையாகிறது.அந்த மாற்றம் சமூகம்சார்ந்த பிரச்சனைகளில் பொதுனையாக செயற்படுகின்ற மாற்றத்தையும் மனநிலையையும் தோற்றுவிக்க வேண்டும்.

Web Design by The Design Lanka