தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தியதும் அதிபர் - ஆசிரியர் பணிபகிஷ்கரிப்பு உடனடியாக முன்னெடுக்கப்படும்..! - Sri Lanka Muslim

தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தியதும் அதிபர் – ஆசிரியர் பணிபகிஷ்கரிப்பு உடனடியாக முன்னெடுக்கப்படும்..!

Contributors

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் அதிபர் – ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாடு மீண்டும் திறக்கப்பட்டதும் உடனடியாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களது சம்பள முரண்பாட்டுப் பிரச்சினையை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

தீர்வை உடனடியாக பெற்றுத்தரக் கோரி அதிபர், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணியின் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

பாடசாலைகள் மீண்டும் திறந்தாலும், கற்பிக்கவோ அல்லது பாடசாலைக்குச் செல்லவோ மாட்டோம் என அதிபர், ஆசிரியர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். இந்த முறை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் மற்றும் பல தொழிற்சங்கங்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team