தனியாரின் தோட்டத்திலிருந்து சிலை அகற்றப்பட்டுள்ளது. - Sri Lanka Muslim

தனியாரின் தோட்டத்திலிருந்து சிலை அகற்றப்பட்டுள்ளது.

Contributors

 

வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி வாழைச்சேனை ஸ்ரீ புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் வைக்கப்பட்ட புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலைக் கிராம சேவகர் பிரிவில் பாசிக்குடா வீதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான எச்.எம்.எம். இப்றாகிம் என்பவருக்குச் சொந்தமானது.

இக்காணிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையே  அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக காணி உரிமையாளரான எச்.எம்.எம். இப்றாகிம் தெரிவித்துள்ளார் .

கடந்த சில காலமாக இப்பிரதேசத்தில் அடிக்கடி புத்தர் சிலை முளைப்பதும் அகற்றுவதும் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டப்படுகிறது .TC

Web Design by Srilanka Muslims Web Team