தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை..! - Sri Lanka Muslim

தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை..!

Contributors

கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரை விடுத்துள்ளது.

தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ் இன்று குறித்த குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தனர்.

இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாத கிரிக்கெட் தடையும் தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மென்திஸ்க்கு எதிராக 24 மாத கிரிக்கெட் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team