தன்னைப் புகழா தலைமை கேட்டேன் (கவிதை) » Sri Lanka Muslim

தன்னைப் புகழா தலைமை கேட்டேன் (கவிதை)

politics

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ODI வெல்லும்
ஒரு சிங்கம் கேட்டேன்
மோடி தொலைய
நாடிக் கேட்டேன்

கழுகாமல் பாவிக்கும்
காலுறை கேட்டேன்
புளுகாமல் கதைக்கும்
புரோக்கர் கேட்டேன்

லீவு போடும்
லெக்சரர் கேட்டேன்
சாவு வீடில்லா
மேசன் கேட்டேன்

பிந்தி வருகின்ற
பிராஞ் மெனேஜர் கேட்டேன்
தொந்தி இல்லாத
போலீஸ் கேட்டேன்

சிக்னல் சந்தியில்
சிறகுகள் கேட்டேன்
CTB பஸ்ஸில்
சீற் பெல்ட் கேட்டேன்

மொக்கை இல்லா
முக நூல் கேட்டேன்
சிக்கல் இல்லா
நக்கல் கேட்டேன்

பேக் ஐடி இல்லா
பிரண்ட்கள் கேட்டேன்
காக்கா பிடிக்கா
ஆட்கள் கேட்டேன்

கன்னியைப் புகழா
கவிதைகள் கேட்டேன்
தன்னைப் புகழா
தலைமை கேட்டேன்

வெட்டுப் படாத
மின்சாரம் கேட்டேன்
குட்டுப் போ(ப)டாத
சம்சாரம் கேட்டேன்

பக்கத்து வைபையின்
பாஸ் வேர்ட் கேட்டேன்
கக்கத்தில் வியர்க்கா
கை பெனியன் கேட்டேன்

கேட்டேன் கேட்டேன்
பாட்டில் கேட்டேன்
நாட்டில் இல்லாததை
நான் இங்கு கேட்டேன்

Web Design by The Design Lanka