தமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது – சரத் பொன்சேகா - Sri Lanka Muslim

தமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது – சரத் பொன்சேகா

Contributors

துப்பாக்கி முனையில் தமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பகுதியில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து :-

“நாட்டில் மனித உரிமைகள் இல்லையென ஐக்கிய நாடுகள் சபையின் பலர் கூறுகின்றனர். அதே போன்று நாட்டில் ஜனநாயகம் இல்லயைனவும் கூறுகின்றனர்.இவையனைத்தும் உண்மையே இவர்களுக்கு பொதுமக்களை ஏமாற்ற முடியாது. .எங்களின் இந்த அரசியல் பயணத்தை ரத்துபஸ்வலவைப் போன்று துப்பாக்கியால் சுட்டு நிறுத்த முடியாது”

அங்கு  உரையாற்றிய அனோமா பொன்சேகா, அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு முயற்சிக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.

அனோமா பொன்சேகா தெரிவித்த கருத்து :-

“தொடரந்தும் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவை குறைக்க இந்த அரசாங்கத்திற்கு அவசியமில்லை.எந்தவித நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை.எதிர்காலத்தில் கிடைக்குமா என்றும் கூறமுடியாது.நாங்கள் தொடர்ந்தும் துன்பங்களையே அனுபவிக்க நேரிடும் “(nf)

Web Design by Srilanka Muslims Web Team