தமிழகத்தில் 2 மாதங்களில் 17 விவசாயிகள் தற்கொலை » Sri Lanka Muslim

தமிழகத்தில் 2 மாதங்களில் 17 விவசாயிகள் தற்கொலை

agri

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

வறட்சி காரணமாக 17 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வறட்சியால் பயிர்கள் கருகியதைப் பார்த்து மனவேதனை அடைந்த பல விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர்.

பயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் நியமித்த குழுக்கள், தமிழகம் முழுவதும் நிலவும் வறுமை தொடர்பான கள நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘தமிழகத்தில் வறட்சியால், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 17 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலை செய்த 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்’ என அறிவித்தார்.வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முதல் முறையாக தமிழக அரசு உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka